ஆசிரியரிடமிருந்து…
(மே-ஜுன் 2015)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
நம்மை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வர வழைத்தவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான நூல் வாயிலாக தேவன் செய்துவரும் மகத்தான கிரியைகளுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். இன்னும் அநேகர் இத்தியான புத்தகத்தின் வாயிலாக பிரயோஜனமடைய வேண்டுதல் செய்கிறோம். இவ்விதழ் வாயிலாக தாங்கள் பெற்றுவரும் ஆசீர்வாதங்களை தொடர்ந்து எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். இத்தியான புத்தகத்தை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்த அன்பாய் கேட்கிறோம்.
உங்கள் ஜெபக் குறிப்புகளையும் மனபாரங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். நாங்கள் உங்கள் தேவைகளுக்காக பாரத்தோடு ஜெபிப்பதோடு நல் ஆலோசனைகளையும் உங்களுக்கு வழங்க ஆயத்தமாயிருக்கிறோம். இப்புத்தகத்திலுள்ள துதி ஜெப விண்ணப்ப பகுதியிலுள்ள ஜெப குறிப்புகளுக்காக எங்களோடு இணைந்து ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம்.
சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வருடத்தில் சத்தியவசன நிகழ்ச்சிகள் தொடர்ந்து வெளிவர உதவும்படி அன்பாய் கேட்கிறோம். இவ்வூழியப் பணிகள் வாயிலாக இன்னும் அநேகர் இயேசுவை சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொள்ளவும் அநேகர் கிறிஸ்துவுக்குள் கட்டப்படவும் இவ்வூழியத்தின் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்யுங்கள்.
இவ்விதழில் மே மற்றும் ஜூன் ஆகிய இரண்டு மாத தியானங்களையும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார்கள். இத் தியானங்கள் நம்மை ஆறுதல்படுத்துகிறதாயும் எச்சரிப்பதாயும், நம் ஆவிக்குரிய வாழ்விற்கு ஏற்ற ஆலோசனைகளை உள்ளடக்கியதாயுமுள்ளது. இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்