ஆசிரியரிடமிருந்து…

(மே-ஜுன் 2016)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களோடு கூட இருக்கிறேன் என்று வாக்களித்த அன்பின் தேவகுமாரன் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இவ்விதழில் பிரசுரமாகியுள்ள தியானங்கள் உங்கள் ஒவ்வொருவருடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். இத்தியானங்கள் வாயிலாக பிரயோஜனமடைந்தோர் எழுதுகிற சாட்சி கடிதங்களுக்காகவும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கிறவர்களுக்காகவும் நன்றி கூறுகிறோம்.

தமிழ்நாட்டிலும் மற்ற 4 மாநிலங்களிலும் நடைபெற்றுவரும் சட்டசபை தேர்தல் அமைதலோடும் சமாதானத்தோடும் நடந்து முடிய வேண்டுதல் செய்வோம். தேவன் தமக்கு சித்தமானவர்களை ஆட்சியில் அமர்த்தவும் நல்லாட்சி அமையவும் கிருபை செய்வார். தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் நமது பங்காளர்கள் மற்றும் வாசகர்களுடைய பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்கிறோம். தேவன்தாமே அவர்கள் எதிர்பார்க்கும் நல்லமுடிவுகளை காண கிருபை செய்வார்.

சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களை ஜெபத்தோடு தாங்கிவரும் அனைத்து பங்காளர்களுக்காக, ஆதரவாளர்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். சந்தாவைப் புதுப்பிக்காத பங்காளர்கள் புதுப்பித்து இவ்வூழியங்களை இணைக்கரம் கொடுத்து தாங்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

மே மாத தியானங்களை பிள்ளைகள் வளர்ப்பு பராமரித்தல் கிறிஸ்துவுக்குள் நல் வழிப்படுத்துதல் ஆகியவற்றை மையமாக வைத்து சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் தயாரித்து வழங்கியுள்ளார்கள். ஜுன் மாதத்தில் சகோதரி ஜெபி பீடில் அவர்கள் இரட்சிக்கப்பட்ட நாம் கிறிஸ்துவுக்குள் வளர்வதற்கான ஆலோசனைகளை தியானங்களாக எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு பிரயோஜனமாயிருக்க தேவன்தாமே கிருபை செய்வாராக!

கே.ப.ஆபிரகாம்