ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 24 வெள்ளி
“… ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்” (யாத். 20:4) சிவகெங்கை மாவட்டத்தில் உள்ள அதிகப்படியான கத்தோலிக்க மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவும், பராம்பரியத்திற்கு அடிமைப்பட்டுள்ள மக்கள் அவற்றிலிருந்து விடுதலையாவதற்கும் சுவிசேஷ இயக்கத்திலிருக்கிற ஊழியர்களை தேவன் வல்லமையாய் உபயோகிக்க ஜெபிப்போம்.