ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 27 வியாழன்
அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் (சங்.92:15) நமது பங்காளர் குடும்பங்களில் முதிர்வயதின் பெலவீனங்களோடு இருக்கும் ஒவ்வொருவரையும் பெலனாகிய கர்த்தர் தாங்கி நடத்தவும், கர்த்தருடைய அர வணைப்பும் பாதுகாப்பும் அவர்களோடிருந்து அவர்களது தனிமை எண்ணங்களையும் பயங்களையும் நீக்கிப்போடுவதற்கும் ஜெபிப்போம்.