ஜெபக்குறிப்பு: 2021 மே 25 செவ்வாய்

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்: திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு (சங்.27:14) இவ்வாக்குப்படியே இருதயத்தை ஸ்திரப்படுத்துகிற கர்த்தர்தாமே குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபித்துக்கொண்டிருக்கும் பங்காளர் குடும்பத்திலுள்ள சகோதரிகளுக்கு மனமிரங்கவும் குறித்த காலத்தில் கர்த்தர் அருளும் பலனைப் பெற்றுக்கொள்வதற்கும் ஜெபிப்போம்.