ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 28 ஞாயிறு
உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு (சங்.16:11) இந்தநாளின் ஆராதனைவேளையின் ஒவ்வொரு பகுதியையும் கர்த்தர் ஆசீர்வதித்து அவருடைய சமுகத்தின் மகிழ்ச்சியாலும் ஆனந்தத்தாலும் நிரப்பி உலகத்தால் எடுக்கமுடியாத சமாதானத்தைக் கொடுத்து ஆராதனையை ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.