ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 20 ஞாயிறு
பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை (மத்.16:18) தேவனாகிய கர்த்தர் நமது தேசத்தின் வட இந்திய மாநிலங்களில் உள்ள சபைகளை பாதுகாத்திடவும், தேவனைத் தொழுதுகொள்ள எந்தவொரு இடமும் இல்லாத கிராமங்களிலும் ஆலயம் கட்டப்பட கர்த்தர் கிருபை செய்து, ஊழியர்களுக்கு விரோதமாக செயல்படுகிற எதிர்வல்லமைகள் செயலற்றுப் போகச் செய்வதற்கு ஜெபிப்போம்.