ஜெபக்குறிப்பு: 2022 மே 2 திங்கள்
கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம் (சங்.31:21) என்ற வாக்குப்படி இன்று சத்தியவசன ஊழியத்தில் 35வது வருடத்திற்குள் பிரவேசித்துள்ள மேலாளர் சகோ.பழனிவேல் ஆபிரகாம் அவர்களை கர்த்தர் தொடர்ந்து ஊழியத்தில் எடுத்து உபயோகிக்கவும், நல்ல சுகபெலன் தந்தருளவும் அவர்கள் குடும்ப ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.