ஜெபக்குறிப்பு: 2022 மே 18 புதன்
நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே தாமதியாதேயும் (சங்..70:5) எல்லா வித இக்கட்டிலும் இருந்து விடுவிக்கிறதேவன்தாமே பலவிதச் சூழ்நிலைகளாலே கடன்பாரத்திற்குள் சிக்குண்ட பங்காளர் குடும்பத்தினருக்கு இரங்கி அவர்களை விடுவிக்கவும், இனி இப்படிப்பட்ட அவதிகளுக்குள் அகப்படாதபடி வேண்டிய ஞானத்தோடு நடந்துகொள்ள ஜெபிப்போம்.