ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 17 சனி
அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார் (யோவேல் 2:18) இவ்வாக்குப்படியே இலங்கை தேசத்தையும் ஜனங்களையும் கர்த்தர் கடாட்சிக்க, அங்கு நடைபெறும் சத்தியவசன ஊழியங்களுக்காகவும் ஒவ்வொருவரையும் கிருபை வரங்களால் நிரப்பி தேவவல்லமையால் அவர்களை வழிநடத்திச் செல்லவும் வேண்டுதல் செய்வோம்.