ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 29 வியாழன்

உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார் (1தெச.5:24) தேவ அழைப்பைப் பெற்று வட இந்தியாவில் ஊழியம் செய்யும் அனைத்து மிஷனெரிகளின் நல்ல சுகம் பாதுகாப்புக்காகவும், அவர்களை தாங்குகிற திருச்சபைகள், மிஷனெரி ஸ்தாபனங்கள், விசுவாச குடும்பங்கள் யாவரையும் சர்வவல்லமையுள்ள தேவன் ஆசீர்வதிக்க, கனப்படுத்த வேண்டுதல் செய்வோம்.