ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 1 சனி

என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும் (புலம்பல் 3:56).

நான் உன்னோடே இருந்து … நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதி.28:15) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே நமக்கு பலத்த துருகமாக இருந்து இந்த மாதம் முழுவதிலும் நமக்கு துணையாக, கேடகமாக, பலத்த அரணாக இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் கைவிடாதிருக்கவும் அவரை நோக்கி மன்றாடுவோம்.