ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 2 ஞாயிறு

அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார் (சகரி.9:9) குருத்தோலை பவனி செல்லும் எல்லா திருச்சபைகளிலும் பயபக்தியான ஆராதனை நடத்தப்படவும், ஒவ்வொரு விசுவாசியும் கனத்துக்குரிய நாளாகவும் மனமகிழ்ச்சியின் நாளாகவும் இந்த நாளில் கர்த்தரின் நாமத்தை பிரசித்தப்படுத்த ஜெபிப்போம்.