ஜெபக்குறிப்பு: 2023 மே 10 புதன்
அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள் (எரேமி.29:12) என்ற வாக்குப்படியே இந்த நாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூடுகையில் கர்த்தருடைய ஆவியானவர் தம்முடைய ஆளுகையின் பிரசன்னத்தினால் நிரப்பி, ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்கள் அத்தனைக்கும் தமது தயவுள்ள சித்தத்தின்படி ஏற்ற பதில்களை அருளிச் செய்வதற்கு தேவனிடம் மன்றாடுவோம்.