ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 4 ஞாயிறு

சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! (சங்.84:1) சர்வ வல்லமையுள்ள தேவனை ஆராதிக்கும்படியாக கூடின எல்லா திருச்சபை ஆராதனைகளிலும் அவருடைய பிரசன்னம் நிறைந்திருக்கவும், வெறுமையோடும் கவலைகளோடும் வந்த ஒவ்வொருவரும் கர்த்தருடைய நிறைவான மகிழ்ச்சியைப் பெற்றுக்கொண்டவர்களாய் செல்லவும் ஜெபிப்போம்.