ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 4 வியாழன்
தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான் (நீதி.25:28) என்ற வாக்கைப்போல குடி மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட்டவர்களை, அந்த அடிமைத்தனத்திலிருந்து கர்த்தர் விடுவித்திடவும், தங்கள் மனதைக் கட்டுப்படுத்த பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு உதவி செய்து மீண்டும் அவற்றில் சிக்கிக்கொள்ளாதபடி கர்த்தர் பாதுகாக்க ஜெபிப்போம்.