ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 30 செவ்வாய்
நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன் (சங். 116:17) இந்தமாதம் முழுவதும் நம்மைப் போஷித்து, நமக்கு தஞ்சமாகவும், ஆதரவாகவும், நல்ல மேய்ப்பராகவும், நல்ல ஆலோசகராகவும் இருந்து நம்மை பாதுகாத்து நடத்திவந்த தூயாதிதூயவரை ஸ்தோத்திரித்து மகிமைப்படுத்தி ஜெபிப்போம்.
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக்கா 18: 7,8).