ஜெபக்குறிப்பு: 2024 மே 19 ஞாயிறு
கிராமப்புறங்களில் உள்ள கிறிஸ்தவ விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவனை (ஈசாக்கை) ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான் (ஆதி.26:12) என்ற வாக்குப்படியே கர்த்தர் நிலத்தில் செழிப்பை கட்டளையிடவும். ஒவ்வொரு கிராமத்திலும் ஆலயம் கட்டப்பட்டு சபை கூடிவருதல் தவறாது காணப்படவும், சிறுவர்களுக்கான ஓய்வுநாட் பாடசாலை நடத்தப்படுவதற்கும் ஜெபிப்போம்.