ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 18 செவ்வாய்
நமது தலைநகர் டெல்லிவாழ் மக்களுக்காக ஜெபிப்போம். டெல்லியின் காற்று சுவாசிக்க தகுதியில்லாதவை எனச் சொல்லுமளவுக்கு காற்றின் தரம் மோசமான நிலையடைந்துள்ளது. இந்நிலை மாறவும் சுகாதாரமான சூழல் உண்டாகவும், அங்குள்ள திருச்சபை ஊழியங்கள், மிஷெனரி பணிகள், நற்செய்தி பணியாளர்களை கர்த்தர் ஆசீர்வதித்து சபைகள் ஏராளம் கட்டப்பட ஜெபிப்போம்.