ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 1 சனி
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; …நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள் (யாக். 5:15,16).
கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரையே தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் (எரேமி.17:7) இப்புதிய மாதத்திற்காக தேவனுக்கு துதி ஸ்தோத்திரங்களைச் செலுத்தி, கர்த்தர்மேல் வைத்த நம்பிக்கையிலே அசையாமல் உறுதியோடிருந்து, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓட தேவன் கிருபை செய்ய ஜெபிப்போம்.