ஜெபக்குறிப்பு: ஜனவரி 17 வியாழன்
“.. ஒருவன் என்னிலும், நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்” (யோவா.15:5) இவ்வாக்குப்படி அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை தியானித்து வரும் ஒவ்வொருவரும் கர்த்தருக்குள் நிலைத்திருந்து அதிக கனிகளைக் கொடுக்கவும், சகோதரி சாந்திபொன்னு மற்றும் தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காகவும் ஜெபம் செய்வோம்.