வாசகர்கள் பேசுகிறார்கள்

1. அன்பார்ந்த சகோதரி, தங்களின் வேதாகமப்புதிர் மூலம் வேதத்தின் ஒரு புத்தகத்தை முழுவதுமாக நன்கு ஆழ்ந்து படிக்க வேண்டிய ஆசை உண்டாகிறது. கேள்வியை எடுப்பதென்பது மிகவும் கடினமானது. ஆண்டவர் உங்களுக்கு வேண்டிய ஞானம் தர ஜெபிக்கிறேன். படித்து எழுதுகிற எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக ஆசீர்வாதமாக உள்ளது. உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Mrs.Salvakani Anantharaj, Palayamkottai

2. அனுதினமும் கிறிஸ்துவுடன் காலை தியானங்கள் மிக மிக ஆசீர்வாதமாக இருக்கின்றன. புதிய கருத்துக்களைக் கொண்டதாக, வேதாகமப் பகுதிகளை தெளிவுபடுத்துகின்றன. சஞ்சிகையில் வெளிவரும் கட்டுரைகளும் மிக அற்புதம். தற்பரிசோதனை செய்ய உதவுவதுடன் கட்டுரைகள் மிகவும் கருத்தாழமிக்கவையாயிருக்கின்றன. நன்றி. டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பாக்கியம் அடிக்கடி கிட்டும். ஊழியங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன்.

Mrs.Angelina  Packianathan, Coimbatore.

3. மார்ச் – ஏப்ரல் மாத சத்தியவசன சஞ்சிகையில் வெளிவந்த கெத்சமனே தோட்டம் பகுதியும், பொறுப்புமிக்க தலைமைத்துவம் பகுதியும் ஆழ்ந்த சத்தியம் நிறைந்ததாகவும், சிந்திக்க வைக்கின்றனவாகவும் இருக்கின்றன.

Mrs.Annal Samuel, Chennai

4. அன்பிற்குரிய சகோதரருக்கு, வேதவினா விடையளித்தல் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. ஆதியாகமம் முழுவதுமாக படித்து அதன் இரகசியங்களை அறிந்துகொண்டேன். அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்று விசுவாசிக்கிறேன். நன்றி.

Mrs.Indra Jasmine, Kovai

5. Dear Brothers& Sisters in Christ, Greetings to you all. Thank you for sending regularly your Magazine. Every article is forcefully challanging and spiritually encouraging, I do continue to pray for you all your endeavours, to reach the receivers hearts. T.V. Programmes are decisively making. Do continue to pray for me.

Mr.S.Raja sekeran, coimbatore.

6. தமிழன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக் குறித்து அளித்த செய்தி மிகவும் பிரயோஜனமாக இருந்தது. ஊழியத்திற்காக குடும்பமாக ஜெபிக்கிறோம்.

Mr.R.Sekar, Chennai

7. நான் சத்தியவசன விசுவாசபங்காளன். தங்கள் டிவி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். 13.6.2011 அன்று காலை தமிழன் டிவி நிகழ்ச்சியில் Dr.புஷ்பராஜ் அவர்கள் கடைசிகாலத்தில் கள்ளக்கிறிஸ்தவர்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்ற விளக்கம் மிகவும் பிரயோஜனமாக இருந்தது. தொடர்ந்து Dr.புஷ்பராஜ் அவர்களுடைய செய்தியை ஒளிப்பரப்புச் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Mr.G.Rajasingh, Nazareth

சத்தியவசனம்