ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

ஜூலை-ஆகஸ்டு 2015

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

நம்முடைய சமாதானக்கர்த்தராம் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழின் வாயிலாக தங்களோடு தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சத்திய வசனம் சஞ்சிகையிலுள்ள செய்திகள் வாயிலாக அநேகர் ஆசீர்வாதமடைந்து வருவதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம்.

தேவன் நாம் சத்தியத்தை அறிந்து கொள்ளும்படியாகவும் அவரது வருகைக்கு ஆயத்தமாகும் படியாகவும் இக்கடைசிக் காலத்தில் நமக்கு நல்ல தருணங்களையும் சிலாக்கியங்களையும் தந்திருக்கிறார். எனவே தேவன் தந்திருக்கிற இந்நாட்களை நாம் பிரயோஜனப்படுத்திக் கொள்வோம். திறவுண்ட வாசல் அடைபடுவதற்குமுன் தேவனைத் தேடுவோம். சாட்சிகளாய் வாழுவோம். அவருடையவருக்கு நாம் ஆயத்தப்படுவதோடு, ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணுவோம். “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்” (ஏசா.55:6).

சத்தியவசன பங்காளர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை அனுப்பி வைக்கப்படும் புத்தக வெளியீடு வருகிற மாதத்தில் அனுப்பி வைக்கப்படும்.சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய ‘விருத்தாப்பியம்’ என்ற புத்தகத்தை அனுப்பி வைக்கிறோம் என்பதைத் தெரியப்படுத்துகிறோம்.

இவ்விதழில் ‘ஒரே வழி, ஒரே இரட்சகர்’ என்ற தலைப்பில் டாக்டர் உட்ரோ குரோல் அவர்களது கட்டுரையும், சகோதரி சாந்திபொன்னு அவர்கள் ‘நேச வைராக்கியம்’ என்ற தலைப்பில் நாம் நமது நேசருக்காய் எவ்வளவு வைராக்கியத்தோடு அவருக்கு சாட்சிகளாய் வாழுகிறோம் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார்கள். வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் எழுதிய ‘இனிமையற்ற இவ்வுலகின் வழிகள்’ என்ற கட்டுரையின் சென்ற இதழ் தொடர்ச்சியும், டாக்டர் சாம் சமலேசன் அவர்களுடைய ‘மறுபிறப்பும் வெற்றியுள்ள வாழ்க்கையும்’ என்ற கட்டுரையும், டாக்டர் தியோடர் எச்.எப். அவர்களுடைய ‘விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்’ என்ற தொடர் செய்தியும்,  சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் இயேசுகிறிஸ்துவின் உவமையிலிருந்து வழங்கிய ‘உக்கிராணத்துவம்’ என்ற தலைப்பிலான செய்தியும், எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் எழுதிய ‘ஜீவத்தண்ணீர்’ என்ற  வேதமும் விளக்கப் பகுதியும், மற்றும்  சிறுவர் சோலையும் இடம் பெற்றுள்ளது.  இக்கட்டுரைகள் யாவும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்