வாசகர்கள் பேசுகிறார்கள்

ஜனவரி-பிப்ரவரி 2016

1. உங்களது பத்திரிக்கைகள் எனக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதிய ‘விருத்தாப்பியம்’ புத்தகம் கிடைக்கப்பெற்றேன். நான் 65 வயதுள்ள விதவை. பிள்ளைகள் 4 பேருமே வெளியூரில் இருப்பதால் நான் மட்டும் தனியாக இருக்கிறேன். எனக்கு விருத்தாப்பியம் நூல் ஹார்லிக்ஸ், பூஸ்ட் குடித்ததைவிட அதிக பெலனுள்ளதாக இருக்கிறது. சகோதரிக்கு என் உள்ளார்ந்த நன்றி. புது யுகம் டிவி நிகழ்ச்சி மிக அருமை.

Mrs.Amirtha Rani, Tenkasi.

2. என்னுடைய மகள் படிப்பிற்காக நான் ஜெபிக்கக் கேட்டிருந்தேன். கர்த்தர் கிருபையால் என் மகனும் மகளும் பி.இ. முடித்துவிட்டார்கள். பிள்ளைகளுடைய படிப்பிற்காக ஜெபித்த தங்களுக்கு நன்றி கூறுகிறோம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் கோடானகோடி நன்றி.

Mr.G.Vijaya Kumar, Coimbatore.

3. தங்களது மாத தியானமான அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற புத்தகமும், சத்தியவசன சஞ்சிகையும், மிகவும் பிரயோஜனமாக உள்ளது. தினதியானம் மனதிற்கு ஆறுதலாக உள்ளது.

Mrs.Marjorie Kingsly, Chennai.

4. சத்தியவசன ஊழியங்களோடு தொடர்ந்து பங்காளர்களாய் இருப்பதில் மகிழ்ச்சி. Dr.புஷ்பராஜ், Dr.சாம் கமலேசன், கலாநிதி தியோடர் வில்லியம்ஸ் போன்றோரின் செய்திகள் எழுத்துக்கள் எங்களை கிறிஸ்துவில் பெலப்படுத்துகிறது. இந்தவிதமான சத்தியவசன ஊழியத்தில் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ஊழியங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறோம்.

Mr.C.Tharmaraj, K.K.Dt.

5. நீங்கள் அனுப்பியிருந்த விருத்தாப்பியம் நூலைப் படித்தேன். மனம் மகிழ்ந்தேன். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் என்னை வந்து பார்ப்பதேயில்லை. மகளிடம்தான் நான் இருக்கிறேன். முதியவர்களுக்காக எழுதிய நூல், கர்த்தர் உங்களை பெலத்துடனும் சுகத்துடனும் வைக்க கர்த்தரிடம் மன்றாடி ஜெபிக்கிறேன். கர்த்தருக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

Mrs.Saraswathy, Dindugul dt.

6. கடந்த ஆண்டு முழுவதும் தங்களது பத்திரிக்கைகள் யாவையும் அனுப்பியமைக்கு நன்றி. அவை எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாய் இருந்தன. விசேஷமாக அனுதினமும் கிறிஸ்துவுடன் ஒவ்வொரு நாளும் வழிகாட்டியாய் இருந்தது. நன்றி.

Mrs.Vijula, Tiruvellore dt.

7. கடந்த வருடம் இதே நாட்களில் உங்களுக்கு எழுதின கடிதத்தில் எனது சுகத்திற்காக, எனது கணவரின் சுகத்திற்காக, பேரப்பிள்ளைகளின் படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்டிருந்தேன். பேத்தி 10th இல் 476/500 மார்க் எடுக்க கர்த்தர் கிருபை செய்தார். பேரப்பிள்ளைகளின் ஆவிக்குரிய வாழ்வில் நல்ல மாற்றங்களைத் தந்தார். எல்லா ஜெபங்களையும் கர்த்தர் கேட்டு பதில் தந்தார். தேவனுக்கே நன்றி.

Mrs.Devanesam, Kovai.

8. கிறிஸ்துவுக்குள் அன்புடையீர், தங்களின் மாத மற்றும் தின தியான இதழ் மருத்துவ குணம் நிறைந்த ரோஜா இதழ் போன்று அத்தனை மேன்மையானது. கருத்துக்கள் ஆழமானது. தொடரட்டும் தங்களின் இலக்கிய பணி.

Mr.Raja, Karungalpatti.

சத்தியவசனம்