வாசகர்கள் பேசுகிறார்கள்

மார்ச்-ஏப்ரல் 2016

1. Dear Brother in Christ Greetings in the Great Name of our Lord Jesus. your two Magazines, Sathiyavasanam and Anuthinamum Christhuvudan are very useful to me.

Mrs.Sugirtha Johnson, Chennai.

2. I am much benefitted spiritually by your daily devotion Anuthinamum Christhuvudan and Sathiyavasanam bimonthly magazine. May our Lord bless your Ministry immensely.

Mrs.Joy Devapiriam, Coimbatore.

3. தாங்கள் அனுப்பிக்கொடுத்த சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதிய ‘விருத்தாப்பியம்’ என்ற நூலுக்காக நன்றி. சகோதரி அவர்களின் அனுபவமும், திருமறை தரும் ஆலோசனைகளும் அருமை. ‘கொர்பான்’ என்னும் காணிக்கையை செலுத்தும் யூதர்களைப் போல் வாழும் இக்கால பிள்ளைகளுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள். முதியோரும் இளையோரும் அறிந்துகொள்ள வேண்டிய ஆலோசனைகள் மிக அருமை. மொத்தத்தில் படித்து பாதுகாக்கப்பட வேண்டியது இந்நூல். சகோதரி அவர்கள் தொடர்ந்து இறைபணியின் மூலம் நல்ல பல நூல்களை எழுத எமது வாழ்த்துக்கள்.

Mr.D.Stephen Natarajan, Cuddalore dt.

4. விருத்தாப்பியம் என்ற புத்தகம் கிடைத்தது. என்னைப் போன்ற தனிமையில் இருக்கும் வயதானவர்களுக்கு அது ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. அதிக ஆறுதலாக இருந்தது. மேலும் சிலருக்குக் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகமும் எனக்கு அதிக பிரயோஜனமாக உள்ளது.

Mr.Kulanthai Samy, Erode.

5. தங்களது இதழ் பல நல்ல நற்செய்திகளையும் ஆத்ம பாரத்திற்கு ஒத்தடம் கொடுக்கும் அருமருந்தாகவும், அருட்செய்தியானது ஆசீர்வாதம் கொண்டு வருவதாகவும் இருக்கிறது. நல்ல கவிதைகள், வேத வியாக்கினங்களை தாங்கி வருகிறது. ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mr.Kulanthai Samy, Erode.

6. அனுதினமும் கிறிஸ்துவுடன் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை 31.12.2015க்குள் வாசித்து முடித்தேன் என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதிகாலை வேளை முதல் வேலை தங்களது அட்டவணைப்படி வேதவாசிப்பு காலை ‘பரலோக மன்னா’ எனது ஆகாரமாய் உள்ளது. அது என்னைப் பலப்படுத்துகிறது. திடப்படுத்துகிறது. உபத்திரவத்தில் எனது ஆறுதல் அது தான் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Mrs.D.A.Sundararaj. Chennai.

7. Dear Brother, Greetings in the precious Name of our Lord Jesus Christ, Thank you for regularly sending Anuthinamum Christhuvudan and Sathiyavasanam Bimonthly Magazine. Devotion inspires me each morning. Bible Quiz in sathiyavasanam Magazines makes me delve in to the Bible deeper. I regularly watch the TV programmes in Sunday and Monday morning. I pray for everyone who contributed towards Anuthinamum Christhuvudan and the Magazines …. God bless all of you.

Mrs.Angelina packianathan. Coimbatore.

சத்தியவசனம்