முழுமையாகக் கீழ்ப்படிவோம்!

– எஸ்.தர்மகுலசிங்கம், இலங்கை
(மே-ஜுன் 2016)

ஆபிரகாமை அழைத்திட்ட அன்பின் தேவனவர்
ஆண்டு பல காத்திருந்து பெற்றெடுத்த ஒரே மகனை
பலிசெலுத்த வேண்டிப் பணித்திட்ட வேளையிலும்
பதிலேதும் பேசாது பணிவுடனே கீழ்ப்படிந்தார்!

மோசேயை அழைத்து தம் ஜனத்தை மீட்டுவர
மோட்ச லோக தேவனவர் முற்றும் அழைத்தபோது
மறுப்பின்றி மனதாரப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு
மக்களை மீட்டுவர புறப்பட்டார் எகிப்து நோக்கி!!

இராமுழுவதும் வலைவீசி சலித்து நின்ற பேதுருவும்
ஆழத்தில் மீன் பிடிக்க அழைத்திட்ட ஆண்டவரின்
வார்த்தைக்குத் தலைவணங்கி பாடுகளை மறந்து
வலையைப் போட்டவுடன் திரளான மீன்கள் கண்டார்!

அழைத்த ஆண்டவருக்கு ஆபிரகாம் அடிபணிந்தார்
மோட்ச லோக மீட்பருக்கு மோசே கீழ்ப்படிந்தார்
பாடு மறந்து பேதுருவும் பரமனுக்குப் பணிந்திட்டார்
அவர்கள்போல நாமும் முழுமையாகக் கீழ்ப்படிவோம்!

சத்தியவசனம்