வாசகர்கள் பேசுகிறார்கள்

1. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல் கூறுகிறேன். இம்மாதம் வேதாகம கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்து எழுத எனக்கு கர்த்தர் உதவி செய்தார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இன்னும் ஒரு முறை இப்புத்தகத்தைப் படிக்க கர்த்தர் உதவி செய்தார். என் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. உங்களுடைய பிரயாசத்தை அதிகமாக மெச்சி கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். தொடர்ந்து உங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Sakkubai Simon, Tirunelveli.

2. I am a regular viewer of your programmes through TV. They are very Good Bible teaching programmes. I am very much benefited from your programmes. I am also receiving your other books and magazines regularly. May God bless your Ministry. Thanking you.

Mrs.N.Leela Nesabai, K.K.Dt.

3. சகோதரி சாந்திபொன்னு எழுதிய தாயே! உன் தாய்மை தேவ ஈவு என்ற கட்டுரையைப் படித்தேன். என் உள்ளத்தை தேவன் தொடும் உணர்வை அடைந்தேன். நான் இந்து குடும்பத்திலிருந்து ஆண்டவரை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். கட்டுரை எழுதிய சகோதரி சாந்திபொன்னுக்கு கர்த்தருடைய கிருபை இருக்கட்டும். எங்களுக்காகவும் ஜெபியுங்கள்.

Mrs.K.Sarawathy, Rasipuram.

4. நானும் எனது குடும்பத்தாரும் தங்களது நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு கேட்டு பயனடைந்து வருகிறோம். தங்களது பத்திரிக்கையையும் தவறாமல் படித்து வருகிறோம். டாக்டர் புஷ்பராஜ் அவர்கள் திங்கட்கிழமை காலையில் வாலிபர்களுக்காக வழங்கிய செய்தி மிகவும் உபயோகமாக இருந்தது.

Mr.S.Maria Antony, Trichy.

5. Greetings to you in the mighty name of our Lord Jesus Christ. I praise God for enabling its to enter in to a new month. We are immensely blessed by your sincere letter filled with comfort and encouragement. Quoting God’s promises. Kindly continues to uphold us in your prayers as we do remember your ministry in our family prayer.

Mrs.Sarah Magadalane, Chennai.

6.சத்தியவசன சஞ்சிகையில் வெளியிடப்படும் வேதாகமப் புதிர் வேதத்திலுள்ள ஒவ்வொரு புத்தகத்தையும் நன்கு ஆராய்ந்து படிக்க உதவியாயிருக்கிறது.

Mrs.Sarojini Paulmanickam, Salem

7. நானும் எனது குடும்பமும் ஒவ்வொரு வாரமும் தொலைகாட்சி நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறோம். இதில் வரும் பாடல்களும், தேவனுடைய பிள்ளைகள் கொடுக்கும் தேவ செய்திகளும் ஆவிக்குரிய ஜீவியத்திற்கு மிகவும் பிரயோஜனமாயிருக்கிறது. டாக்டர் புஷ்பராஜ், பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார் மற்றும் பலர் கொடுக்கும் தேவசெய்திகளும் பாடல்களும் மிகவும் பிரயோஜனமாயிருக்கிறது.

Mr.S.V.Thangarajan, Thiruvallur.

சத்தியவசனம்