வாசகர்கள் பேசுகிறார்கள்

செப்டம்பர்-அக்டோபர் 2017

1. சத்தியவசன செய்திகளும் அனுதினமும் கிறிஸ்துவுடன் மாத இதழ்களும் எங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது. ஒவ்வொரு செய்திகளும் எங்களுக்கு நம்பிக்கை மட்டுமல்ல, விசுவாசத்தில் வளரவும் உதவுகிறது. ஆவிக்குரிய காரியங்களை அறிந்துகொள்ளவும் சரியாய் விளங்கிக் கொள்ளும்படியாய் சத்தியவசன டிவி நிகழ்ச்சி அமைந்திருக்கிறது கர்த்தருக்கு கோடானகோடி ஸ்தோத்திரம். தினமும் உங்கள் ஊழியங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்.

Bro.T.Selvaraj, Kangayam.


2. சத்தியவசன வானொலி நிகழ்ச்சி அனுதின தியான புத்தகம், சத்தியவசன சஞ்சிகை இவற்றின் மூலம் தினம் தேவனோடு பேசும் அனுபவத்தில் ஆசீர்வாதமும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. உங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mrs.Leelabai, Madurai.


3. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அனுதினமும் கிறிஸ்துவுடன் எமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது. தியானங்களை எழுதுகிறவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ‘சத்தியவசனம்’ கவிதை, கட்டுரைகள் கிறிஸ்துவில் வளர பயனுள்ள கருத்துக்களை தாங்கி வருகிறது. நன்றி. ‘வேதவினாப் போட்டி’ மிக அருமை. முதலில் அதைத்தான் தேடுவேன். வேதத்தை ஆழ்ந்து வாசிக்க உபயோகமாக உள்ளது. அனைத்து சத்தியவசன ஊழியர்கள் பங்காளர்கள் வானொலி, தொலை காட்சி நிகழ்ச்சிகள் யாவற்றிற்காகவும் தொடர்ந்து ஜெபிக்கிறோம். கடவுளின் கிருபை உங்கள் ஊழியங்களோடு எப்பொழுதும் இருப்பதாக.

Mrs.Mary Stephen Natarajan, Neyveli.


4. We are receiving your Ministry and Bimonthly Periodicals regularly. Thank you all very much. God blessed me with a grandson on 15.07.2017. Praise the Lord.

Mr.T.Paul Justus, Chennai.

சத்தியவசனம்