வாசகர்கள் பேசுகிறார்கள்

நவம்பர்-டிசம்பர் 2011

1. I am receiving your magazine regularly. Really I do appreciate you very much for bringing up various aspects from the Bible insights in multi Perfectives. It is so useful to me and also my Ministries. I hope that it will be fruitful to others. I do pray for your Magazine Ministries. God bless you in these ministries. Thanking you.

Rev.A.Samson Paul Gnanaraj, Pamban.

2. நீங்கள் அனுப்பிய சத்தியவசன சஞ்சிகை கிடைத்தது. ஆழமான கருத்து உள்ளதாகவும் அற்புதமான விளக்கம் நிறைந்தாகவும் உள்ளது. Dr.தியோடர் வில்லியம்ஸ் ஐயா அவர்கள் மரித்தும் எழுத்தின் மூலம் எங்களிடம் பேசுகிறார். சகோதரி சாந்திபொன்னு, Prof.எடிசன், சகோ.சுசி பிரபாகரதாஸ், சகோ.வசந்தகுமார், Dr.உட்ரோ குரோல் இவர்கள் எழுதிவரும் கட்டுரைகள் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. இந்த தேவபிள்ளைகள் யாவரையும் பரலோக அப்பா அதிகதிகமாய் உபயோகப்படுத்தவும், அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்க அனுதினமும் ஜெபிக்கிறேன்.

Mrs.Babu, Bangalore.

3. 21.7.2010 அன்று சிறுநீர் பாதையில் சதை ஏற்பட்டு, சுமார் 5 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. மயக்கமருந்து செலுத்தும் முன் நான் மரணஇருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன்; தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர் என்று ஜெபத்தோடு விசுவாசத்தோடு நினைவு இழந்தேன். இன்று நல்ல ஆரோக்கியத்துடன் அடியேனை கடவுள் வைத்திருக்கிறார். ஆபரேஷன் முடிந்து வீட்டுக்கு வந்தபின் வாசிக்காத 11 நாட்கள் தியானங்களை வாசிக்கும்போது, ஆபரேஷன் நடந்த அன்று தியானபுத்தகத்திலும் நான் ஜெபித்துசென்ற (சங்.23:4) அதே வசனம், தியானம் இடம் பெற்றிருந்தது. ஒவ்வொரு நாளும் தியானபுத்தகத்தில் வார்த்தைகள் எனக்காகவே எழுதியதுபோல் இருந்தது. …. சத்தியவசன ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து மேன்மேலும் உயரவும், அநேகர் ஆசீர்வாதம் பெறவும் ஜெபிக்கும்,

Mr.M.Daniel, Covai.

சத்தியவசனம்