வாசகர்கள் பேசுகிறார்கள்

மார்ச்-ஏப்ரல் 2018

|1|
சத்தியவசன சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் ஒழுங்காக வந்துகொண்டு இருக்கிறது. எங்களது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அதிக உபயோகமாக இருப்பதுடன் வார்த்தைகள் வசனங்கள் ஆறுதலாக உள்ளது. சில சமயங்களில் எங்களது கேள்விகளுக்குரிய பதில் கிடைப்பதுடன் தேவன் வசனங்கள் மூலம் இடைபடுவதை நன்றாக உணரமுடிகிறது. தியானங்களை எழுதுகிற சகோதர சகோதரிகளை தேவன்தாமே நிறைவாய் அவரது ஞானத்தினால் நிரப்புவாராக.

Mrs.ElizabethFenn, Madurai.


|2|
As always your literatures are much useful to me and my family. We use Anuthinamum Christhu-vudan during our family prayer and is very useful for our spiritual growth. I am really thankful for this forever. continue your Good work.

Dr.Sam William, Manathavady.


|3|
தங்களது அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் எனக்கு அதிக ஆறுதலாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. நான் 78 வயது விதவை. இம்மாதிரி புத்தகங்கள் வயதான காலத்தில் புத்துணர்ச்சி அளிக்கின்றன. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Mrs.Devi Stanley, Chennai.


|4|
கர்த்தர் கொடுத்த பெலத்தினால் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தக அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை ஒரு வருடத்தில் முழுவதுமாக வாசித்து முடிக்கவும், அன்பு சகோதர, சகோதரிகள் எழுதிவரும் தியானங்களை தினமும் வாசித்து ஆன்மீக பெலன் அடையவும் கிருபை செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.

Sis.Shanthi Manipillai, Coimbatore.


|5|
நீங்கள் அனுப்பி வைக்கும் அனைத்து பத்திரிக்கைகளும் குறிப்பிட்ட நாட்களில் தவறாமல் எங்களுக்கு கிடைத்து வருகின்றன. நன்றி. நீங்கள் ஆற்றிவருகின்ற வானொலி, தொலைகாட்சி, பத்திரிக்கை போன்ற அனைத்து ஊழியங்களும் ஆசீர்வாதமாக ஆண்டவரின் மகிமைக்காக நடைபெற ஜெபிக்கிறேன்.

Bro.Paul Swamykkan, Erode.


|6|
Dear Brother …, Monday Morning Tamilan TV program is a blessing. God bless you all in your efforts to proclaim the Gospel. Thank your for your prayers.

Mrs.Usha prasad, Banglore.

சத்தியவசனம்