செப்டம்பர்-அக்டோபர் 2019

[1]
நான் ஒரு கணித ஆசிரியர். நான் கல்லூரியில் படிக்கும் நாட்களிலிருந்தே சத்தியவசன சஞ்சிகையை வாசித்து வருகிறேன். ‘அனுதினமும் கிறிஸ்துவுடன்’ தியான நூலை எங்கள் குடும்ப ஜெபத்திலும் பயன்படுத்தி வருகிறோம். மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கிறது. தியான நூலில் வாசிக்கவேண்டிய வேதபகுதியை வாசித்து அதிலிருந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம். அதன்பிறகு அந்தநாளின் தியான விளக்கத்தைப் படித்து குறிப்புக்காக ஜெபிப்போம். சில நாட்களில் நாங்கள் கலந்து பேசிக்கொண்ட ஆவிக்குரிய விளக்கங்களே தியான நூலில் இருப்பதை கண்டு ஆவியானவரின் வழிநடத்துலைக் குறித்து ஆச்சரியப்பட்டிருக்கிறோம். எங்கள் ஆவிக்குரிய வளர்ச்சியில் ஒருபங்கு சத்திய வசன ஊழியத்திற்கு உண்டு என்றால் மிகையாகாது.

Mrs.Usharani, Tanjore.


[2]
அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு, தங்களது கடிதம் கிடைத்தது. எனக்கு ஆசிரியபணி வேலை கிடைக்க ஜெபவிண்ணப்பம் எழுதியிருந்தேன். நீங்களும் ஜெபித்தீர்கள். கர்த்தர் எங்களுக்கு பெரிய காரியம் செய்தார். சம்பளம் வருவதற்கும் ஜெபித்துக்கொள்ளுங்கள். கர்த்தர்தாமே இந்த சாட்சியை ஆசீர்வதிப்பாராக.

Sis.Arul Jeba Sutha, Konganthan parai.


[3]
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு தங்களது கடிதம் கிடைத்தது. இப்போது புதுத் தீர்மானத்தோடு மாதந்தோறும் இவ்வூழியத்தை தாங்க விரும்புகிறேன். எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகம் கிடைத்தது. அதிக பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி.

Mr.G.Thilagar, Pattakarai.


[4]
சத்தியவசனம் ஊழியத்தின் மூலம் எங்களில் மனமாற்றம் உண்டு. பத்திரிகைகள் ஆசீர்வாதமாக இருக்கின்றன. உங்களுக்காகவும் ஊழியத்திற்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம்.

Mrs.Leelabai, Madurai. Pattakarai.