வாசகர்கள் பேசுகிறார்கள்

மார்ச்-ஏப்ரல் 2012

1. சத்தியவசன சஞ்சிகையிலுள்ள வேதாகமப்புதிர் வேதத்தை திரும்ப திரும்ப வாசிப்பதற்கும் இன்னும் அதிகமாக சத்தியத்தை புரிந்துகொள்வதற்கும் வேதவினாக்களுக்கான விடைகளை எழுதுவதற்கும் உதவுகின்றது. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். சத்தியவசன ஊழியங்கள் இன்னும் அதிகமாக விரிவடைய தேவனை வேண்டுகிறேன்.

Mrs.Cecily Selvan, Cuddalore.

2. நாங்கள் சத்தியவசன விசுவாசபங்காளர். வானொலி நிகழ்ச்சி முதல் பத்திரிக்கை ஊழியம் எல்லாவற்றின் மூலமாகவும் நாங்கள் ஆசீர்வாதமும், அநேக நன்மைகளும் குடும்பத்திலும் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் பெற்று வருகிறோம். தேவன் தமது கிருபையின்படியும், இரக்கங்களின்படியும் சகல நன்மைகளையும் தந்து வாழச்செய்துள்ளார். அவருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.

Mr.D.Johnson, Coimbatore.

3. கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் எங்கள் வாழ்த்துதலைத் தெரிவிக்கிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகம் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. சத்தியவசன இதழ்களில் உள்ள கட்டுரைகள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. பெண்கள் ஐக்கிய சங்கக்கூடுகையில் அந்தக் கட்டுரைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. மறக்கமுடியாத கட்டுரைகள். தெய்வீகவழிகாட்டி என்னும் நூல் தேவனுடைய கட்டளைகளை இன்னும் ஆழமாக மனதில் இருத்திக்கொள்ளவும், அதனை அன்றாடக வாழ்வில் கைக்கொள்ளவும் நம்மை வழிநடத்துகிறது. சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சியும் மிகவும் உதவியாக இருக்கிறது.

Mrs.C.Sarah Gunaseelan, Dharapuram.

4. வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு பொதிகை டிவியில் சத்தியவசனம் நிகழ்ச்சியைப் பார்த்தேன். சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் கர்த்தருடைய செய்தியைக் கொடுத்தார்கள். எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. தங்களுக்கு மிகவும் நன்றி.

Mr.D.Gabriel, Tirunelveli

5. வெள்ளிக்கிழமை காலை பொதிகை டிவியில் தாங்கள் ஆற்றிய உரையில் வியாதி என்ற தலைப்பில் உரையாற்றினீர்கள். மிகவும் பயனுள்ள கருத்துக்களைத் தெரிவித்தீர்கள். உங்களுக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

Mr. A.Venkata Subramaniyan, Tirunelveli.

6. Dear Annan, Greetings to you in the name of our Lord and saviour Jesus Christ. We are receiving your monthly magazine. It is very useful in our ministerial life and also personal life. Continuously we are praying for you and your Ministry and your family members. Remember my family in your prayer.

Mr.John Dinesh, Jharkhand.

7. உங்களுடைய எல்லா மாதாந்திர வெளியீடுகளும் எங்களுக்கு கிடைக்கின்றன. டிவி நிகழ்ச்சிகளை ஒழுங்காக கேட்டுவருகிறோம். அதிலுள்ள பாட்டுக்கள் மிகவும் இனிமையானவை. தெய்வீக வழிகாட்டி என்ற தலைப்பில் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதிய புத்தகம் தேவன் கொடுத்த பத்து கற்பனைகளைப் பற்றிய விளக்கம் மிகவும் பிரயோஜனமாகவும், எளிய நடையில் எல்லோராலும் விளங்கிக்கொள்ளும்படியாக இருக்கிறது. ஊழியத்திற்காக ஜெபிக்கிறோம்.

Mrs.Pauline Daniel, Chennai.

சத்தியவசனம்