வாசகர்கள் பேசுகிறார்கள்

மே-ஜுன் 2012

1. Greetings in the name of Our Lord Almighty. I have been a faith partner for more than 20 years. My family members are extremely happy listening to the Sathiyavasanam songs. We feel much blessed by the TV Programme also Bible Quiz in the Sathiyavasanam Magazine helps me to have a thorough Bible knowledge of each book in the Bible. May God shower His Blessings abundantly and enlarge the border of your Ministry.

Mrs.Hepziba Beulah, Madurai.

2. இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் வாழ்த்துக்கள். சகோதரி சாந்தி பொன்னு அவர்களின் தெய்வீக வழிகாட்டி என்ற புத்தகத்தை அனுப்பி வைத்தற்காக நன்றி. சத்தியவசன சஞ்சிகை மிகவும் ஆத்துமாவுக்கு பிரயோஜனமாயுள்ளது. வசனங்களை மனதில் பதித்துக்கொள்ள ஞாபகசக்தியும் ஞானமும் தேவன் எங்களுக்கு அருள வேண்டுகிறோம். உங்கள் ஊழியங்கள் சிறப்பாக நடைபெற தேவகிருபை உங்களோடிருப்பதாக!

Mrs.Caroline Franklin, Tiruvannamalai.

3. உங்கள் கடிதம் கிடைத்தது. மிக்க நன்றி. அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கை காலைவேளையில் அமைதியான சூழ்நிலையில் வாசிக்கும் தருணம் மனதில் ஒரு சமாதானத்தையும் அமைதியையும் தருகிறது. அதை எழுதுபவர்களுக்கு மிக்க நன்றி. அதைப் போன்று சத்தியவசன சஞ்சிகையும் என் விசுவாச வாழ்க்கைக்கு மிகுந்த ஆசீர்வாதம் அளிக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் வைரக்கற்கள். சகோதரி சாந்திபொன்னு எழுதிய 10 கற்பனைகளைப் பற்றிய புத்தகமும் கிடைத்தது. உங்கள் ஊழியங்களுக்காக தினமும் ஜெபித்து வருகிறேன்.

Mrs.Susila, Bangalore.

4. கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள சகோதரருக்கு, சத்தியவசன பத்திரிக்கைகள் எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த ஆசீர்வாதமாய் இருக்கிறது. சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதும் கட்டுரைகள் மிகவும் அருமை. தொடர்ந்து உங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Chandra, Bangalore.

5. தங்களின் சத்தியவசனம் பத்திரிக்கை ஒரு நண்பன் மூலமாக கிடைத்தது. அதை நாங்கள் வாசித்தோம். எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெரும் வழிநடத்துதல் இருந்ததை உணர்ந்தோம். எங்களுக்கும் உங்கள் பத்திரிக்கையை அனுப்பித்தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Mr.Nagarajan, Gujarat.

6. தங்களுடைய பொதிகைத் தொலைகாட்சி நிகழ்ச்சியையும், தமிழன் தொலைகாட்சி நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பாகும் செய்திகளை தவறாமல் பார்த்துக்கொண்டு வருகிறேன். அவைகளில் சொல்லப்படும் செய்திகளும் கருத்துகளும் எனக்கு மிகவும் பிடித்தமாக உள்ளன. பாடகர்கள் பாடும் கருத்துள்ள பாடல்களும் செவிக்கு இனிமையாகவும் மிகவும் உயர்ந்த தரமுள்ளவைகளாகவும் இருக்கின்றன. தங்களின் அனைத்துவிதமான சுவிசேஷ ஊழியங்கள் சிறந்து நடைபெற ஆண்டவரை பிராத்திக்கிறோம்.

Mr.Raju, Chennai.

7. சத்தியவசனம் இருமாத இதழில் பிரசுரிக்கப்படும் வேத ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆண்டவரைப் பற்றிய அறிவிலும் அன்பிலும் வளர மிகவும் உறுதுணையாய் உள்ளன. ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்கும் தங்கள் ஊழியத்திற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

Mr.P.Vincent, Srivilliputhur.

சத்தியவசனம்