வாசகர்கள் பேசுகிறார்கள்

மார்ச்-ஏப்ரல் 2013

1. உங்கள் பத்திரிக்கைகள் தாமதமாகக் கிடைத்தாலும் ஆசீர்வாதமாக உள்ளன. உங்கள் ஊழியங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. அவருக்கே மகிமை.

Mrs.Sharmini, Bangalore.

2. உங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை காலை 6:00-6:15 வரை Feba Radio மூலம் 1125Khz-ல் கேட்டு வருகிறோம். குறிப்பாக காலஞ்சென்ற Theodore Williams, Prof.Edison, பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார் ஆகியோ செய்திகளை விரும்பி கேட்டு வருகிறோம்.

 Mr.Samuel, Bangalore

3. நான் அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கையை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக படித்துக்கொண்டு வருகிறேன். இதனால் பல பயன்கள் பெற்றுள்ளேன். ஒவ்வொரு மாதத்திலும் வரும் தினசரி வேத வாசிப்பு குறிப்புகள் மிகவும் அருமையாக உள்ளது. வேதத்தை ஆழமாக ஆராய்ந்து எழுதியிருக்கும் செய்திகள், ஆவிக்குரிய வளர்ச்சியில் உதவவும், வெறும் வார்த்தைகளால் மாத்திரமல்ல, ஒவ்வொரு மனிதனும் கிறிஸ்துவின் சாயலைத் தரித்துக்கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ வழிகாட்டும் புத்தகமாக உள்ளது. பல விஷயங்களை உள்ளடக்கிய சிறந்த பொக்கிஷமாக உள்ளது. உங்கள் ஊழியம் மேன்மேலும் வளர ஆண்டவரை பிராத்திக்கிறேன்.

Mrs.Mercy Rupus, Salem

4. கடந்த ஆண்டிலே தேவன் பாராட்டின ஒவ்வொரு கிருபைகளுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்துகிறேன். பிள்ளைகளின் இடமாறுதலுக்காக ஜெபிக்கக் கேட்டிருந்தேன். தேவன் எங்கள் கண்ணீரின் ஜெபத்தையும், உங்கள் ஜெபத்தையும் கேட்டு விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தனது சொந்த வீட்டிலிருந்து போகக்கூடிய சமீபத்தில் உள்ள பள்ளியில் இடமாறுதல் கிடைக்க கிருபை செய்தார். மேலும் இரண்டு மகள்களுக்கும் பாளையங்கோட்டையிலிருந்து போகக்கூடிய பள்ளிகளில் இடம் கிடைக்க கர்த்தர் கிருபை செய்தார். மேலும் இவ்வூழியம் ஆசீர்வாதமாக நடைபெறவும், தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிக்கிறோம்.

Mrs.Victoria Isaac, Kovaikulam

5. சத்தியவசன புத்தகங்கள் கிடைக்கப்பெற்றோம். எங்களது ஆவிக்குரிய வாழ்வினுக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் துணையாகவும் திகழ்கின்றன. சத்தியவசனம் இருமாத ஏட்டில் செய்திகள் வழங்கி வரும் தேவ தாசர்களின் கட்டுரைகள் ஆவிக்குரிய வாழ்வினுக்குத் தூண்டு கோலாகவும், உலக வாழ்வினில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்து கிறதாகவும் அமைந்திருப்பது மிகவும் நன்று.

Mr.T.Edward Raja Manoharan, Chennai

6. I enjoy reading your Magazines and have great Pleasure in answering the Bible Quiz. Every article is an inspiration. Anuthinamum Christhuvudan is my guide for several years during my morning prayers. Thank you very much for all your books and magazines. I make it a point to listen to your TV Programmes, regularly and the messages are always comforting with all good wishes and prayers.

Mrs.Angeline Packkianathan, Coimbatore.

7. தங்களின் மேலான ஊழியத்தின் மூலம் நானும், என் சகோதரர்கள், சகோதரிகள் அவர்கள் தம் முழுகுடும்பங்களும் தேவனை அறிகிற அறிவில் வளர்கிறோம். தங்களின் “அனுதினமும் கிறிஸ்துவுடன்” மற்றும் “சத்திய வசன சஞ்சிகை” என்ற புத்தகங்களை தவறாமல் பெற்று ஆவிக்குரிய காரியங்களில் வளர்ந்து வருகிறோம். மேலும் தங்களின் ஜெபம் மற்றும் ஆறுதலின் வார்த்தைகள் நிறைந்த கடிதங்களின்மூலம் மிகுந்த ஆறுதல் பெறுகிறோம்.

Sis.K.Pushparani, Chengalpat.

சத்தியவசனம்