சத்தியவசனம் பங்காளர் மடல்

மார்ச்-ஏப்ரல் 2014

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

தேவனுடைய இராஜ்யம் விரிவடையும் பணியில் எங்களுக்கு ஆதரவு கரம் தந்து வருகிற உங்கள் ஒவ்வொருவருக்காகவும் தேவனைத் துதிக்கிறோம். சத்தியவசன ஊழியப் பணிகள் மூலம் தாங்கள் பெற்றுவரும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்பாய் கேட்கிறோம்.

சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் மார்ச் 30ஆம் தேதி முதல் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை தோறும் Feba வானொலியில் மத்திய அலைவரிசை MW 1125Khz-ல் காலை 6:15 மணிக்கு ஒலிபரப்பாகும் என்பதை தெரியப்படுத்துகிறோம். இம் மாற்றத்தை வானொலி நேயர்கள் கருத்திற்கொள்ள அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன விசுவாசப் பங்காளர் சந்தாவை நீண்ட நாட்களாக புதுப்பிக்காதவர்கள் புதுப்பித்துக்கொள்ள நினைவூட்டுகிறோம்.

இவ்விதழில் கிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றை மையமாக வைத்து சிறப்பு செய்திகளை வெளியிட்டுள்ளோம். உடன்படிக்கையும் பலியும் என்ற தலைப்பில் டாக்டர் உட்ரோ குரோல் அவர்களும், “இதோ, தேவ ஆட்டுக்குட்டி” என்ற தலைப்பில் சகோதரி.சாந்தி பொன்னு அவர்களும் எழுதிய செய்திகள் இயேசுகிறிஸ்து நமக்காக தம்மையேப் பலியாக ஒப்புக்கொடுத்து புதிய உடன்படிக்கையையும் மீட்பையும் ஏற்படுத்தினார் என்பதை விளக்குகிறது. பிலாத்துவைக் குறித்து டாக்டர் தியோடர் வில்லியம்ஸ் அவர்களும், யூதாஸ் காரியோத்தைக் குறித்து பேராசிரியர்.எடிசன் அவர்களும், சிலுவைக்கு அருகில் நின்ற நூற்றுக்கதிபதியைக் குறித்து சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களும் எழுதிய சிறப்புச்செய்திகள் இயேசுவின் பாடுகளையும், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களையும் நமக்கு எடுத்துரைக்கிறது. டாக்டர்.புஷ்பராஜ் அவர்கள் இயேசு சிலுவையில் மொழிந்த 7 வார்த்தைகளைக் குறித்த சிறப்புச் செய்தியின் வாயிலாக சிறந்த 7 ஆவிக்குரிய சத்தியங்களை விளக்கியுள்ளார்கள். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்ததின் மூலம் நாமும் உயிர்த்தெழுவோம் என்ற ஒப்பற்ற சத்தியத்தை தனது செய்தியில் சகோ.எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் விளக்கியுள்ளார்கள். இச்செய்திகளின் வாயிலாக நீங்கள் யாவரும் பிரயோஜனமடைய வேண்டுதல் செய்கிறோம்.

சத்தியவசன வாசகர்கள், பங்காளர்கள் யாவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாகவும் ஊழியர்களின் சார்பாகவும் ஈஸ்டர் தின வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்