ஆசிரியரிடமிருந்து…
(ஜூலை-ஆகஸ்டு 2014)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
நம்மை மீட்கும்படியாய் இவ்வுலகிற்கு வந்த அன்பின் ஆண்டவர் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
வேத வசனத்தை விதைக்கும் இப்பணியில் தேவன் நம் மத்தியில் செய்து வரும் மகத்தான கிரியைகளுக்காய் அவரை ஸ்தோத்தரிக்கிறோம். இப்புதிய கல்வியாண்டை ஆரம்பித்திருக்கும் நம் பங்காளர் மற்றும் வாசகர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்கிறோம். கர்த்தர் தாமே நமது பிள்ளைகளை ஆசீர்வதித்து அவர்களுக்கு சிறந்த ஞானத்தைத் தந்து கல்வி பயில உதவி செய்வார். பிள்ளைகளுடைய கல்விக்கான பணத் தேவைகளை தேவன் தாமே தமது ஐசுவரியத்தின்படி அற்புதமாய் சந்திக்கும்படி வேண்டுதல் செய்கிறோம்.
சத்தியவசன ஊழியங்கள் வாயிலாக தாங்கள் பெற்றுவரும் ஆவிக்குரிய நன்மைகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். பங்காளர்களுக்கான சந்தாவை இதுவரை புதுப்பிக்காதவர்கள் தயவுசெய்து புதுப்பித்து இவ்வூழியத்தைத் தாங்கும்படி அன்பாய் கேட்கிறோம். “அனுதினமும் கிறிஸ்துவுடன்” தியான நூலை உங்கள் ஆவிக்குரிய நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வையுங்கள். அவர்கள் முகவரிகளை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் மாதிரி பிரதிகளை அனுப்பி வைப்போம்.
இவ்விதழில் ஜூலை மாத தியானங்கள் ஆதியாகமத்திலுள்ள சம்பவங்களிலிருந்து பல்வேறு தலைப்புகளில் தொகுத்து எழுதப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாத தியானத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் யோனாவின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து நாம் கடைபிடிக்க வேண்டிய சத்தியங்களை தொகுத்து எழுதியுள்ளார்கள். இத் தியானங்கள் யாவும் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு அனுதின மன்னாவாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்