ஆசிரியரிடமிருந்து…
(மார்ச்-ஏப்ரல் 2015)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
நம்மை மீட்கும்படியாக தன்னையே ஈந்த அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
இத்தியானங்கள் மூலம் அநேகர் பிரயோஜனமடைந்து வருவதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். இத்தியானங்களை எழுதுகிற தேவபிள்ளைகளை உங்கள் ஜெபத்தில் தாங்க அன்பாய் கேட்கிறோம். 2014-ஆம் ஆண்டில் வேதாகமத்தை வாசித்து முடித்தோர் பெயர்களை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். இன்னும் அநேகர் புதிதாக 2015-ஆம் ஆண்டில் இவ்வட்டவணையின்படி வேதாகமத்தை வாசிக்க உற்சாகப்படுத்துகிறோம்.
வருகிற லெந்து காலங்களில் நடைபெறுகிற சிறப்பு கூட்டங்கள் மற்றும் முன்னேற்ற பணி விவரங்களை இவ்விதழில் வெளியிட்டுள்ளோம். மதுரை, பெங்களுரு மற்றும் நெல்லையிலுள்ள பங்காளர்கள் இக்கூட்டங்களில் பங்கெடுத்து ஆசீர்வாதம் பெற அழைக்கிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் சத்தியவசன இணைய தளத்தில் (www.sathiyavasanam.in) தினமும் இடம்பெறுகிறது. இதை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் தங்கள் உறவினர்களுக்கும் ஆவிக்குரிய நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைக்க அன்பாய் கேட்கிறோம்.
இவ்விதழில் மார்ச் 1ஆம் தேதி முதல் 28 வரையிலான தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் இயேசுகிறிஸ்துவின் சிலுவை, பாடு, மரணத்தை மையமாக வைத்தும், மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 வரையுள்ள தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் பரிசுத்த வாரத்திற்கான தியானங்களாகவும் எழுதியுள்ளனர். இந்த லெந்து நாட்களில் இத்தியானங்கள் நமக்கு மிகுந்த பிரயோஜனமாயிருக்க வேண்டுதல் செய்கிறோம். மேலும் ஏப்ரல் 6 முதல் 20 வரை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும், 21 முதல் 30 வரையுள்ள தியானங்களை சகோ.தர்மகுல சிங்கம் அவர்களும் எழுதியுள்ளனர். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் பிரயோஜனமாயிருக்க வேண்டுதல் செய்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்