வாசகர்கள் பேசுகிறார்கள்

(மார்ச்-ஏப்ரல் 2015)

1. We thank you for sending us the daily devotional `Anuthinamum Christhuvudan’ regularly. It is very useful for our daily family prayers. We are very much refreshed by your Messages.

Mr.D.Selwyn, Punjab.

2. அனுதினமும் கிறிஸ்துவுடன் நவம்பர் மாத இதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய தியானங்கள் ஒரு எச்சரிக்கை மணி. தாழ்மையின் அவசியத்தையும் அதின் மகத்துவத்தையும் டிசம்பர் மாதத்தில் சகோ.சேவியர் அவர்கள் மிக அருமையாக விளக்கியுள்ளார்கள்.

Mr.G.Dhanaraj, Coimbatore.

3. இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். கர்த்தருடைய பெரிதான கிருபையால் அனுதினமும் கிறிஸ்துவுடன் வெளியீட்டில் கொடுக்கப்பட்டுள்ள வேதவாசிப்பு அட்டவணைப்படி 2014 ஆம் ஆண்டு ஒரு முறை வேதாகமத்தை வாசித்து முடித்துள்ளேன். தியானநூல் எனது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் உள்ளது. ஊழியங்களுக்காக ஜெபித்து வருகிறேன்.

Mrs.Chandra Jackson, Pudukottai.

4. அனுதினமும் கிறிஸ்துவுடன் தின தியானம் மிக மிக உதவியாக சந்தோஷமாக, ஆத்துமாவுக்கு பலம் ஊட்டுவதாக உள்ளது. என் வயோதிப காலத்தில் உற்றத்துணையாக இருப்பதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். இவ்வருடத்தில் புதிதாய் ஒருநபரை அறிமுகப் படுத்துகிறேன்.

Mrs.Nirmala Martin, Bangalore.

5. கடந்த 2014 ஆம் ஆண்டு கர்த்தர் செய்த பெரிய அற்புதங்களுக்காய் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களுக்காக மனப்பாரத்தோடு ஜெபித்த தங்கள் அனைவருக்கும் நன்றி. அனுதினமும் கிறிஸ்துவுடன் என்கிற புத்தகம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனது மகன் கல்லூரியில் சேர கர்த்தர் அற்புதமாக அநுக்கிரகம் செய்தார். கடை சியாக இருந்த ஒரே ஒரு சீட்டினை மிகவும் அற்புதமாக என் மகனுக்கு கிடைக்க கர்த்தர் உதவி செய்தார். பல நேரங்களில் எனக்கு வேலை இல்லாதபோதும் எங்களது தேவைகளை கர்த்தர் நிறைவேற்றினார். கர்த்தருக்கு கோடானகோடி நன்றிகள்.

Mr.Saleem Arulmani, Ooty.

6. அனுதினமும் கிறிஸ்துவுடன் தவறாமல் படிப்பேன். தங்களது அருமையான ஆலோசனைகள் போதனைகள் மிக அருமை. வயதாகி விட்டதால் ஞாபக சக்தியை இழந்துவிடுகிறேன். 2014ஆம் வருடத்திலும் அட்ட வணைப்படி வேதாகமத்தை வாசித்து முடித்துவிட்டேன். யாவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகளும் ஸ்தோத்திரங்களும்.

Mrs.Christal Rajasingh, Asaripallam.

7. ஸ்தோத்திரம். 2014 ஆம் ஆண்டில் அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தில் உள்ள அட்டவணைப்படி வேதாகமத்தை ஒரு முறை உணர்ந்து முழுமையாக வாசித்து முடிக்க கர்த்தர் கிருபையாக உதவி செய்தார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Mrs.K. Rajakumari, Madurai.