ஆசிரியரிடமிருந்து…

(மார்ச்-ஏப்ரல் 2016)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

“நம்முடைய பாவங்களையும் சாபங்களையும் சிலுவையில் சுமந்து தீர்த்த” ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இதிலுள்ள ஒவ்வொரு தியானங்களும் வாசிக்கிற ஒவ்வொருவருடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பிரயோஜனமாயிருக்க வேண்டுதல் செய்கிறோம். தியானபுத்தகத்தின் மூலமாக தாங்கள் பெற்றுவரும் ஆசீர்வாத நன்மைகளை எங்களுக்கு எழுதுங்கள். மற்றவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்துங்கள்.

தவிர்க்க முடியாத சில காரணத்தால் 2016 ஆம் வருட காலண்டர் தாமதமாக அனுப்ப நேரிட்டது. கடந்த மாதத்தில் பங்காளர்கள் அனைவருக்கும் காலண்டரை அனுப்பி வைத்திருந்தோம். காலண்டர் விநியோகத்திற்கும் உள்ளது. கூடுதலாக தேவைப்படுவோரும் எங்களுடன் தொடர்புகொள்ள அன்பாய் கேட்கிறோம்.

2015 ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். அவர்களது பெயர் பட்டியலை 7ஆம் பக்கத்திலே பிரசுரித்துள்ளோம். தங்களது பெயர்களைத் தெரிவித்தும் பிரசுரிக்கப்படாமல் இருந்தால் எங்களுக்கு எழுதுங்கள்.

எதிர்பாராமல் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையினால் ஞாயிறு காலை ‘புது யுகம்’ டிவியில் ஒளிபரப்பி வந்த தொலைகாட்சி நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் துவங்க ஜெபத்தோடு முயற்சிக்கிறோம்.

இவ்விதழில் மார்ச் மாத தியானங்களை சகோதரி சாந்திபொன்னு அவர்கள் உடைக்கப்படுதலின் அனுபவத்தை மையமாக வைத்து எழுதியுள்ளார்கள். ஏப்ரல் மாத தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ளார்கள். தியானங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கும்,

கே.ப.ஆபிரகாம்