வாசகர்கள் பேசுகிறார்கள்
(ஜனவரி-பிப்ரவரி 2016)
1. தங்களது வெளியீடுகளான அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் ஆகிய புத்தகங்கள் மிக அழகான வேதவிளக்கங்களுடன் எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாய் இருக்கின்றன. கர்த்தர் தாமே சத்தியவசன ஊழியத்தை இன்னும் அதிகதிமாக ஆசீர்வதித்து அநேக ஆயிரமான மக்களுக்கு பயன்படுத்துவாராக!
Sis.Pradeepa, Vellore.
2. தாங்கள் அனுப்பித்தந்த விருத்தாப்பியம் என்ற புத்தகம் மிகமிக அருமையாக இருந்தது. ஒன்றரை நாட்களில் இதை படித்து முடித்துவிட்டேன். இந்நூல் இக்காலத்தின் வயது முதிர்ந்தோருக்கும். நம் பிள்ளைகளுக்கும் ஏற்றபடியும், வசனத்தின்படியும் அமைந்துள்ளது. எனக்கு அதிக பிரயோஜனமாக இருந்தது. இரண்டரை வருடங்களாக எனது கணவருக்கு நான் செய்யும் உதவிகளை நினைத்தும் அவரால் நான் படும் வேதனைகளை நினைத்து கவலையோடு ஆண்டவருடைய சமுகத்தில் அநேகந்தரம் போராடினது உண்டு. தங்களின் நூலைப் படித்தவுடன் கர்த்தர் தங்களுக்கு கொடுத்த பொறுமையை எண்ணி தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
Mrs.Nirmala doss, Udathagai.
3. நீங்கள் அனுப்பிய விருத்தாப்பியம் புத்தகம் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. அந்த புத்தகத்தைப் படித்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன். எனக்கு 78 வயதாகிறது. இந்தநாள்வரை வீட்டின் வேலைகளை இயன்றளவு செய்து வருகிறேன். சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.
Mrs.Daisy Simon, Coimbatore.
4. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் என் தனி ஜெபத்திற்கு பெரிதும் உதவியாயிருக்கிறது. சகோதரிகள் சாந்திபொன்னு, தர்ஷினி சேவியர் அவர்களின் விளக்கவுரை நல்ல ஒரு வழிகாட்டியாக இருக்கின்றது. மேலும் வேதவாசிப்பு வரிசை அட்டவணை மூலம் இதுவரை 5 முறை வேதாகமத்தை வாசித்துமுடிக்க தேவன் பெலன் தந்தார். தங்கள் ஊழியம் மேலும் விரிவடையட்டும் என்று குடும்பமாக ஜெபித்து வருகிறோம்.
Sis.Shanthi Manipillai, Coimbatore.
5. கடந்த 3 ஆண்டுகளாக சத்தியவசன பங்காளராக இருந்துவருகிறோம். சிறப்பாக அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற புத்தகத்தின் தியானங்களை எங்கள் குடும்ப ஜெபத்தில் வாசித்து ஜெபம் செய்து வருகிறோம். தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகும் செய்திகள், வேத விளக்கங்களைக் கேட்டு ஆசீர்வாதம் அடைகிறோம். ஊழியம் மேன் மேலும் வளர ஜெபிக்கிறோம்.
Mrs.Janet Mary, Madurai.
6. The book `Viruthappiyam’ is a great encouragement for the elderly and my special appreciation for the Author. May the Good Lord continue to enlarge your ministry and provide for all the needs in my prayer.
Dr.Jebrraj Samuel, Chennai