ஆசிரியரிடமிருந்து…
(ஜூலை-ஆகஸ்டு 2016)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
நம்மை வழுவாமல் பாதுகாக்கும் அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இவ்வருடத்தின் பாதிநாட்களை தேவகிருபையால் கடந்துவந்திருக்கிறோம். 70வது சுதந்திரதினத்தை கொண்டாடும் நம்முடைய தேசத்திற்கு தேவன் தந்த வாக்குத்தத்தங்களெல்லாம் நிறைவேறவும், அழிவைநோக்கி அனுதினமும் சென்றுகொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் இரட்சிப்பிற்காக, மீட்பிற்காக திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்’ (1தீமோ.2:4).
“அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான இதழின் வாயிலாக தேவன் செய்துவரும் மகத்தான கிரியைகளுக்காக அவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறோம். இத்தியானங்கள் வாயிலாக வாசகர்கள் கற்றுவரும் சத்தியங்களை தங்கள் வாழ்வில் கைக்கொண்டு கனியுள்ள வாழ்க்கை வாழ வேண்டுதல் செய்கிறோம்.
சத்தியவசன ஊழியத்தின் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் இன்னும் அநேகர் நற்செய்தியை அறிந்து கொள்ளவும் வேண்டுதல் செய்யுங்கள். உங்கள் மனபாரங்களையும் ஜெபக்குறிப்புகளையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்காக பாரத்தோடு வேண்டுதல் செய்வோம். தங்கள் சந்தாவை இதுவரை புதுப்பிக்காத பங்காளர்கள் உடனடியாக புதுப்பிக்க நினைவூட்டுகிறோம்.
இவ்விதழில் ஜூலை மாத தியானங்களை சகோ. தர்மகுலசிங்கம் அவர்களும் ஆகஸ்ட் மாத தியானங்களை சகோதரி சாந்திபொன்னு அவர்களும் அன்றாட வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டிய சத்தியங்களை ஜெபதியானத்தோடு தயாரித்து வழங்கியுள்ளார்கள். இத்தியானங்கள் வாயிலாக அநேக தேவபிள்ளைகளின் ஆவிக்குரிய வாழ்வு கட்டியெழுப்பப்பட வேண்டுதல் செய்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்