ஆசிரியரிடமிருந்து…
(செப்டம்பர்-அக்டோபர் 2016)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
தமது மகிமையுள்ள சந்திதானத்திலே நம்மை மாசற்றவர்களாய் நிறுத்த வல்லமையுள்ள தேவனின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இம்மாதத்திலும் இத்தியான புத்தகத்தின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். தியானங்கள் ஒவ்வொன்றும் தங்களது அனுதின வாழ்க்கைக்கு நல்ல ஆலோசனையாகவும் வழிகாட்டுதலாகவும் இருப்பதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். அநேகர் புதிய சந்தாதாரரர்களை அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். மிக்க நன்றி கூறுகிறோம். தாங்கள் பெற்ற ஆவிக்குரிய நன்மை களையும் கருத்துக்களையும் எங்களுக்கு எழுதுங்கள்.
நமது கிறிஸ்தவ ஜீவியத்திலே நாம் அநேகவேளைகளிலே பல துன்பங்களையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியதுள்ளது. 1பேது.1:6இல் சொல்லப்பட்டபடி அப்படிப்பட்ட துன்பங்கள் கொஞ்சகாலம் தான். அவைகள் சீக்கிரத்தில் நீங்கிப்போகும். உலகத்தை ஜெயித்த கிறிஸ்து நம்மோடிருக்கிறபடியாலே நாமும் ஜெயிப்போம். சத்தியவசன ஊழியத்தை தங்கள் ஆதரவான காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கிவரும் பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்காகவும் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். உங்களுக்காக ஜெபிக்கிறோம். உங்கள் மனபாரங்களையும் ஜெபக்குறிப்புக்களையும் எங்களுக்கு எழுதுங்கள். உங்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம். தங்கள் சந்தாவை இதுவரை புதுப்பிக்காத பங்காளர்கள் புதுப்பித்துக் கொள்வதற்கும் நினைவூட்டுகிறோம்.
இவ்விதழில் செப்டம்பர் மாத தியானங்களை சகோதரி.தர்ஷினி அவர்கள் எழுதியுள்ளார்கள். Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தியானங்களை அக்டோபர் மாதத்திலும் பிரசுரித்துள்ளோம். ‘நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படுவதற்கு’ இத்தியானங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்றே விசுவாசிக்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்