வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜனவரி-பிப்ரவரி 2018)

|1|
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தை யாவரும் படித்து வருகிறோம். மிகவும் ஆறுதலாக இருக்கிறது. பலவிதமான சூழ்நிலையில் இருக்கும்போது தியானபகுதி மூலம் பெலனடைகிறோம். ஆறுதலாகவும் இருக்கிறது. எங்களது விசுவாச பாதையிலும் ஆவிக்குரிய ஜீவியத்திலும் நிலைத்து நிற்கவும் எங்களுக்காக ஜெபிக்க கேட்டுக்கொள்கிறேன்.

Mrs.M.V.Samuel, Nellikuppam


|2|
தங்களின் அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழை பெற்றுவருகிறேன். தினமும் வேதத்தை கருத்தோடு படிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

Mr.D.Prabudoss, C/o 99 APO


|3|
அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசன சஞ்சிகை அனைத்தும் தொடர்ந்து வருகின்றன, மிகுந்த ஆசீர்வாதமாக பிரயோஜனமாக உள்ளது. மிக்க நன்றி. வானொலி செய்தியும் தவறாது கேட்டு வருகிறேன். நன்றாக உள்ளது.

Mrs.S.Gandhiraj, Chengalpattu.


|4|
நான் கடந்த அநேக ஆண்டுகளாக சத்தியவசன பங்காளராக உள்ளேன். எப்போதும் சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிக்க மறக்கமாட்டேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் வேதாகமப் பகுதிகளை அதிகாலை வேளையில் வாசிப்பதோடு மாலை வேளைகளிலும் வாசித்து தியானித்து திருப்தி அடைகிறேன். செப்டம்பர் மாத தியானங்கள் மிகமிக நேர்த்தியான ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. விசுவாசத்தில் இன்னும் உறுதியாய் நிலைத்து வளர்வதோடு இனமறியாதொரு மனநிம்மதியையும் திருப்தியையும் பெற்றுக்கொள்ள முடிகிறது. சத்தியவசன ஊழியங்களையும் ஊழியர்களையும் இந்தக் கடைசி காலங்களிலே கர்த்தர் அபரிமிதமாக ஆசீர்வதித்து வளர்ச்சியடையச் செய்ய ஜெபிக்கிறேன்.

Mrs.Chandrabaipaul, Chennai.


|5|
தங்களின் அனுதினமும் கிறிஸ்துவுடன் தினமும் படிக்கிறேன். ஜெபக் குறிப்புகளுக்காக ஜெபிக்கிறேன். காலையில் மொபைலில் அனுப்பும் வசனங்களை வாசித்து பயனடைகிறேன். தினமும சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mr.Ruban Immanuel, Chennai.

சத்தியவசனம்