ஆசிரியரிடமிருந்து…

(மே – ஜுன் 2018)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இத்தியானங்கள் மூலமாக ஆசீர்வாதமடைந்தவர்கள் எழுதிய சாட்சி கடிதங்களுக்காக தேவனைத் துதிக்கிறோம். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்காக ஜெபிக்கக் கேட்ட அனைவருக்காகவும் நாங்கள் பாரத்தோடு ஜெபித்தோம். பிளஸ் டூ எழுதின பிள்ளைகள் யாவரும் சிறந்த மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்று விரும்பின உயர்கல்வியை பெறுவதற்கு கர்த்தர் கிருபை செய்யவும், செமஸ்டர் தேர்வு எழுதப்போகும் பிள்ளைகளுக்காகவும் தொடர்ந்து ஜெபிக்கிறோம்.

மார்ச் மாதம் முதல் whatsapp ஊழியத்தை துவங்க தேவன் கிருபை செய்தார். ஒவ்வொரு நாளின் அன்றாட வேதவாசிப்பு, அந்த நாளுக்குரிய வேதவாக்கு தினசரி ஜெபக் குறிப்புகள் அதில் இடம்பெறுகின்றன. தாங்கள் இவ்வூழியத்தின் மூலம் பயனடைய விரும்பினால் தங்கள் பெயரையும் வாட்ஸ் ஆப் எண்ணையும் பதிவு செய்துக்கொள்ளவும். whatsapp No. 6380692034 ஆகும்.

இவ்வருட பங்காளர் காணிக்கையைப் புதுப்பித்துக் கொண்டு தொடர்ந்து சத்தியவசன ஊழியத்தை ஜெபத்தோடு தாங்கிவருவதற்கும் அன்புடன் வேண்டுகிறோம்.  சத்தியவசன காலண்டர் தேவைப்படுவோர் எங்களுக்கு எழுதுங்கள். இலவசமாக அனுப்பித் தருகிறோம்.

இவ்விதழின் மே மாதத்தில் சகோ.ஏர்னஸ்ட் அவர்கள் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் கடந்து செல்லவேண்டிய போராட்டங்கள் சோதனைகளில் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து கனிகொடுக்கிற சத்தியங்களை தியானங்களாக தொகுத்து எழுதியுள்ளார்கள். ஜுன் மாதத்தில் சகோதரி.ஜெபி பீடில் அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டும்பணியில் அழைக்கப்பட்டிருக்கிற நாம் நெகேமியாவின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகளையும் நேர்த்தியாக எழுதியுள்ளார்கள். இத்தியானங்களை எழுதிய சகோதர, சகோதரிகளுக்காக ஜெபியுங்கள். இத்தியானங்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கும்,

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்