வாசகர்கள் பேசுகிறார்கள்

(மே – ஜுன் 2018)

|1|
I am in receipt of your Anuthinamum Christhuvudan and Magazines regularly. The prayerful Messages and essays in each page of the issues are directely pierced every heart of readers and make all readers to come close to Jesus.

Mr.Dhanaraj, Coimbatore.


|2|
ஐயா நீங்கள் மாதாமாதம் அனுப்பும் புத்தகம் கிடைத்தது. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தின் மூலம் நல்ல செய்தி கிடைக்கிறது. தேவனை நான் இன்னும் அதிகமாக தேடும் ஆர்வம் உள்ளது. நான் படித்த பிறகு என்னுடன் உள்ள சகோதரிகளுக்கும் படிக்கக் கொடுக்கிறேன். அவர்களும் படித்து பயன்பெறுகிறார்கள். தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

Mrs.Radha, Trichy.


|3|
அனுதினமும் கிறிஸ்துவுடன் கால அட்டவணைப்படி வேதாகமத்தை ஒரு ஆண்டில் படித்து முடித்துவிட்டேன். கர்த்தருடைய பெரிதான கிருபையால் எனக்கு 8௦ வயது துவங்கிவிட்டது. வேதாகமத்தை வாசிக்கவும் அதன் மேன்மையையும் அதின் ஆழத்தையும் அறிந்துகொள்ளவும் வாஞ்சையையும் விருப்பத்தையும் ௮திகமாக கொடுத்துவருகிறார். தணியாக இருப்பதால் அதிக நேரம் ஜெபிக்கவும் வேதாகமத்தை வாசித்து தியானிக்கவும் கர்த்தர் கிருபை கொடுத்து வருகிறார்.

Mrs.Leela Packianathan, Tuticorin.


|4|
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தில் பிரசுரமாகும் அட்டவணைப்படி 2017ஆம் ஆண்டில் பரி.வேதாகமத்தை முழுவதுமாக ஒருமுறை வாசித்து முடித்துவிட்டேன். வேதாகமத்தை முழுவதுமாக வாசித்து முடிக்க தியானபுத்தகம் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. நான் கடந்த ஐந்தாண்டு காலமாக இந்தப் புத்தகத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வேதாகமத்தை முழுமையாக வாசித்து முடித்துள்ளேன் என்பதையும் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தவறாமல் இப்புத்தகம் கிடைப்பதற்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Mrs.Gnanajothi Selvaraj, Nallur.


|5|
Dear Brother, The two Magazines from yourself Sathiyavasanam and Anuthinamum Christhuvudan is very much blessing to our family. Thank you for your prayers.

Sis.J.Sugirtha, Chennai.


|6|
தாங்கள் வெளியிடுகின்ற சத்தியவசன, அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகங்கள் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பிரயோஜனமுள்ளது. தினசரி வேதவாசிப்பு பகுதிகள், ஒவ்வொரு நாளுக்கான தியானங்கள் எங்களை அதிகதிகமாய் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிறது. உங்கள் ஊழியத்தை அதிக ஆசீர்வாதமானதாக காண்கிறேன்.

Mr.G.Prabin, Reetapuram.


|7|
சத்தியவசன பத்திரிக்கைகள் தடையின்றி வருகிறது. கால அட்டவணைப்படியும் மற்றும் ஜெப விண்ணப்பங்களையும் தினமும் காலையில் வாசித்து பயன்பெறுகிறோம். அவைகள் எங்கள் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் வேதத்தை படித்துமுடிக்க ஆண்டவர் உதவி செய்கிறார்.

Mr.Joel Selvanayagam, Coimbatore.

சத்தியவசனம்