ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 16 வெள்ளி
சுமார் 11.4 கோடி மக்கள் வாழும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள திருச்சபை ஊழியங்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். நாக்பூரில் குழந்தைகள் விபசாரத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது நிறுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுப்பதற்கும், அந்த மாநிலத்தில் அதிகமாக காணப்படும் தற்கொலை தடுக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.