ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 1 புதன்
என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும்இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக (சங்.66:20).
நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார் (ஏசா. 54:8) இப்புதிய மாதத்தில் கர்த்தர் நம்மை போதித்து நடத்தவும், தேவனுடைய பரி பூரணமான சித்தம் நம்மில் நிறைவேறவும் நம் தேவைகள் அனைத்தையும் சந்திக்கவும் சுகம் நலன் அருளவும் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.