இரண்டு எண்ணங்களுக்கிடையில் தடுமாறி நிற்றல்

தியானம்: 2021 மே 7 வெள்ளி | வேத வாசிப்பு: 1 இராஜாக்கள் 18:19-21

நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் (18:21).

சில வருஷங்களுக்கு முன்னால் “இன்றைய USA” என்னும் செய்தித்தாள் ஒரு செய்தியை வெளியிட்டது. அது காலதாமதம் செய்கிறவர்களின் குழு ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யத் தீர்மானித்தது. நவம்பர் மாதத்தில் நடக்கும் தேர்தலில் கலந்துகொள்ளவும் திட்டம் தீட்டினர். அந்தக் குழுவின் தலைவர் USA-யில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும்விட இவர்களுடைய புதிய கட்சிதான் ஒற்றுமை, ஐக்கியம், ஒருமைப்பாடு இவற்றில் முன்னிலையில் நிற்கும். இது தலைவர் லேவாஸின் கருத்து. நாங்கள் ஒரு விஷயத்தில் கருத்தொற்றுமை இல்லாதவர்கள் ஆகிவிட்டால் அதைப்பற்றி விவாதிக்கக் கூடுவதில்லை. இக்குழுவின் தலைவர் வாஸ் ஒரு சிறந்த பேச்சாளர். அவர் தமது தேர்தல் திட்டம் பற்றி இவ்வாறு கூறினார். நவம்பர் முதல் வாரம் வேட்பாளர் தெரிந்தெடுக்கும் பணி ஆரம்பமாகும். எங்கள் பணி இரண்டாம் வார முடிவுக்குள் நிறைவுறாவிட்டால் தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தலை சில வாரங்கள் தள்ளிப்போடும்படி கேட்போம். அப்போதுதான் எங்கள் கட்சி தேர்தலில் கலந்துகொள்ள முடியும்.

எலியாவின் காலத்து மக்கள் காலம் தாழ்த்தும் தன்மை உடையவர்களாயிருந்தனர். தீர்க்கதரிசி எலியா அவர்களிடம் ஒரு முக்கியமான தீர்மானம் செய்யத் தூண்டினார். அவர்கள் கர்த்தரை தெய்வமாக ஏற்று வழிபடுவார்களா? அல்லது பாகாலை தெய்வமாக ஏற்று வழிபடுவார்களா? அவர்களை நிலைப்படுத்துவதற்காக அவர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், அவர்கள் ஒரு பதிலும் கூறாமல் அமைதியாக நின்றார்கள். சில காரியங்கள் யாருக்கும் எந்தத் தீமையும் நஷ்டமும் ஏற்படாதபடி தள்ளிப்போடலாம்.

நாம் நம்முடைய ஸ்ட்ராபெரி செடியை இந்த வருடம் பயிரிட முடியவில்லையானால் அடுத்த வருடம் அதைச் செய்துகொள்ளலாம். சுடச்சுட வெளிவரும் புதிய அதிகம் விற்பனையாகும் புத்தகங்களை இந்த வருடம் வாங்கிப் படிக்க முடியவில்லையானால், பின்னால் வாங்கி படித்துக்கொள்ளலாம். புத்தக வினாப் பட்டியலில் அந்தப் புதிய புத்தகங்களின் பெயர் இடம் பெற்றிருக்கும். ஆனால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக் குறித்து ஒருவரும் ஒன்றும் சொல்லவோ, செய்யவோ முடியாது. நாம் செய்யத் தவறும் ஆவிக்குரிய தேர்வுகள் நித்திய காலம்வரை நம்மை வதைத்துக்கொண்டிருக்கும்.

வேதாகமத்தை வாசிக்கும் விஷயத்தில் கால தாமதம் செய்கிறீர்களா? ஜெபிக்க நேரம் செலவழிப்பதில் கால தாமதம் செய்கிறீர்களா? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதில் கால தாமதம் செய்கிறீர்களா? அப்படியானால் இதையும் செய்யாமல், அதையும் செய்யாமல் தடுமாறி நிற்கும் நிலையை அகற்றுங்கள்.

ஆவிக்குரிய நல்ல தீர்மானங்களைச் செய்யுங்கள்; அவை நித்திய காலத்துக்கு உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை உண்டாக்கும்.

ஜெபம்: மன்னிப்பின் தேவனே, காலம் தாமதம் செய்த தருணங்களை எனக்கு மன்னியும். இன்றே ஆவிக்குரிய நல்ல தீர்மானங்களை எடுக்க எனக்கு உதவியருளும். ஆமென்.