ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 1 வெள்ளி

உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு … அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை  அவர்களுக்குக் கிடைக்கப்பண்ணுவீராக (1இரா.8:49,50).


நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை (ஏசா.44:21). நம்மை உள்ளங்கையில் வரைந்திருப்பவரும் மறவாதவருமாகிய தேவன்தாமே இப்புதிய மாதத்தில் நமது கைகளின் பிரயாசங்களை ஆசீர் வதித்து தமது செட்டைகளின் மறைவில் வைத்து பாதுகாக்கும்படியாக நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.