ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 14 வியாழன்
கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து … (1கொரி. 11:23) இந்த விசேஷித்த நாளை நினைவுகூரும் திருச்சபை ஆராதனைகளுக்காக, பாரம்பரியமாக அனுசரிக்கும் கிறிஸ்தவர்கள் மெய்யான மனந்திரும்புதலோடு திருவிருந்தில் பங்குபெற்று கர்த்தருக்கு சாட்சிகளாய் வாழ தங்களை அர்ப்பணிக்கத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.